பிக் பாஸ் குறித்து திட்டிய நடிகருக்கு அறிவுரை வழங்கிய சிம்பு!

பிக் பாஸ் குறித்து திட்டிய நடிகருக்கு அறிவுரை வழங்கிய சிம்பு!


Caston| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:37 IST)
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் அமோக ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க எல்லாருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

 
 
அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதனை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே நடிகை ஸ்ரீபிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ரோபோ ஷங்கர், சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தங்கள் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
 
அதிலும் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரே பிக் பாஸ் அப்டேட்தான். இந்நிலையில் அவர் தன்னுடைய ஒரு பதிவில், ஓவியாவை தவிர்த்து மற்ற அனைத்து பிக் பாஸ் பங்கேற்பாளர்களை திட்டிக்கொண்டு வந்தார்.

 
இதனை பார்த்த நடிகர் சிம்பு சதீஷுக்கு பதில் அளிக்கையில், யாரையும் தவறாக பேச வேண்டாம். நமக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். கண்டிப்பாக தவறுகளை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என டுவீட் செய்திருந்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :