செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 ஜூன் 2017 (21:04 IST)

வித்தை காட்டும் சிம்பு

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்து வரும் சிம்பு பாடல் ஒன்றில் கால் தரையில் படாமல் ஆடியுள்ளாராம். 


 

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை இரண்டடு பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் பாகம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது.
 
இதில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடிக்கிறார். அஸ்வின் தாத்தா டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு இந்த படத்தில் ஒரு சாதனை படைத்துள்ளாராம்.
 
ரத்தம் என ரத்தம் என்ற பாடலுக்கு கால் தரையில் படாமல் நடனம் ஆடியுள்ளாரம். இப்படி நடனமாடுவது இந்தியாவிலே இதுதான் முதல்முறையாம். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.