நடிகர் சங்க போராட்டத்தில் உடன்பாடு இல்லை: சிம்பு!

Last Updated: ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (17:53 IST)
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இன்று காலை அரவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை.
காலை 9 மணி அளவில் துவங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிம்பு பேசியது பின்வருமாறு...
 
மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சினிமா பிரச்சனைகளுக்கே தீர்வு காணவில்லை அதற்குள் காவிரி பிரச்சனைக்கு களமிறங்கிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
 
காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள், நமக்கு தண்ணீர் வாங்கி கொடுக்க மாட்டார்கள் என பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :