Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செருப்பைப் புகழ்ந்து பாடிய சிம்பு

cauveri manickam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:58 IST)
செருப்பைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாடலொன்றைப் பாடியுள்ளார் சிம்பு.
 
‘புதிய கீதை’ ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. தொலைந்துபோன ஹீரோயின் செருப்பைத் தேடுவதுதான் கதை. ‘பசங்க’ படத்தில் நடித்த தமிழ் (பாண்டி) இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மழைக்காலத்தில் நிகழும் இந்தக்கதையைப் படம்பிடிக்கும் காலகட்டத்தில் மழைபெய்ய… பாதி காட்சிகளை நிஜ மழையிலும், மீதி காட்சிகளை சினிமா மழையிலும் படமாக்கியிருக்கிறார் ஜெகன். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் இஷான் தேவ். பாடல்களைக் கேட்டு அசந்துபோன இயக்குநர் கெளதம் மேனன், தன் ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’ இசை நிறுவனத்தின் மூலம் வாங்கியுள்ளார்.

விஜய் சாகர் வரிகளில் உருவாகியுள்ள ‘செருப்புடா’ பாடலை, சிம்பு பாடிக் கொடுத்துள்ளார். செருப்பின் வரலாறைச் சொல்லும் இந்தப் பாடலில், 90 இடங்களில் செருப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :