Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனிமேல் டைரக்ட்டா ஹாலிவுட் தான்: சிம்பு எடுத்த அதிரடி முடிவு

புதன், 9 ஆகஸ்ட் 2017 (23:20 IST)

Widgets Magazine

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் திரையுலகில் சிம்புவின் நேரம் சரியில்லை. சிம்புவின் படம் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகின்றது.பொறுத்து பொறுத்து பார்த்த சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் (!) மூன்று வேடங்களில் AAA படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் அவரது கேரியரையே காலியாக்கிவிட்டது 
 
இந்த நிலையில் தான் சிம்பு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நம்முடைய திறமையை இங்கு ரசிக்க ஆளில்லை. இனிமே டைரக்டா ஹாலிவுட் தான். வேண்டுமானால் போனால் போகுது அந்த ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்வோம் என்ற முடிவை எடுத்துள்ளார்.
 
ஆம், தற்போது நடித்து இயக்கி வரும் சிம்புவின் அடுத்த படம் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த படத்தின் ஆங்கில வசனங்களை கவுதம் மேனன் எழுதி வருவதாகவும் சிம்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் தன்னுடைய படத்தில் பல வசனங்களை ஆங்கிலத்தில்தான் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படமாவது வெற்றி பெற்று சிம்புவின் வாழ்க்கையில் ஒளியேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நீயெல்லாம் ஒரு ஆளா? நமிதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மிகள்

பிக்பாஸ் என்ற ஸ்டார் சிறையில் இருந்து தப்பித்தது எனக்கு நிம்மதியே என்று அந்த வீட்டை ...

news

ரஜினி, கமல், அஜித், விஜய் செய்யாத சாதனையை செய்த சிவகார்த்திகேயன்

'இது நம்ம ஆளு' வெற்றி படத்திற்கு பின்னர் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ...

news

அப்படி போடு அறுவால, தமிழன் ஆளப்போறாண்டா! எஸ்.ஜே.சூர்யா பெருமிதம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி மிகபெரிய ...

news

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட காஜல் அகர்வால்!!

நடிகை காஜல் அகர்வால் எண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்தார். அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி ...

Widgets Magazine Widgets Magazine