வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (19:53 IST)

பிரசாந்தின் சாஹசம் படப்போஸ்டரை வெளியிடும் சிம்பு

பிரசாந்த் நடித்துவரும் சாஹசம் படத்தின் மோஷன் போஸ்டரை சிம்பு நாளை வெளியிடுகிறார்.
 

 
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனத்தில் சாஹசம் தயாராகி வருகிறது. படத்தை அவரே பிரமாண்டமாக தயாரிக்கிறார். தமன் இசை. சிம்பு, ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரேயா கோஷல் போன்ற பிரபலங்கள் பாடல்கள் பாடியுள்ளனர்.
 
சாஹசம் நீண்ட நாளைக்குப் பிறகு வெளியாகும் பிரசாந்தின் படம் என்பதால் மிகப்பிரமாண்டமாக படத்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். ஒரு பாடலுக்கு நர்கிஸ் பக்ரி பிரசாந்துடன் ஆடியுள்ளார். அமண்டா என்ற புதுமுகம் நாயகி. அருண் ராஜ் வர்மா என்பவர் படத்தை இயக்குகிறார்.
 
இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை நாளை இரவு வெளியிடுகின்றனர். நடிகர் சிம்பு இந்த போஸ்டரை வெளியிடுகிறார். படத்தின் பாடல்களை மலேசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.