Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீடியாக்களுக்கு கட்டளையிட்ட சிம்பு!!


Cauveri Manickam (Suga)| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:29 IST)
’என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் செய்திகளை மட்டுமே வெளியிடுங்கள்’ என மீடியாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார் சிம்பு.

 
 
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படையாக நடந்து கொண்டதால், ஓவியாவை ஏகப்பட்ட பேருக்குப் பிடித்துவிட்டது. ‘பிக் பாஸ்’ வீட்டில் இருக்கும் எல்லோரும் ஓவியாவை கரித்துக் கொட்ட, வெளியில் இருப்பவர்கள் மத்தியில் ஓவியாவுக்கு ஆதரவு பெருகியது. அதில், பிரபலங்களும் அடக்கம். ஓவியாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பிரபலங்களில், சிம்புவும் ஒருவர்.
 
தற்போது ஓவியா ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளதால், அவருக்கான ஆதரவு இன்னும் பெருகியுள்ளது. இந்நிலையில், சிம்புவும் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதாவது, ஓவியாவை சிம்பு காதலிப்பதாகவே அந்த ட்விட்டர் தகவல் பரவியது.
 
இதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட, சிம்புவிடம் இருந்து மறுப்பு வந்துள்ளது. “என் பெயரைக் களங்கப்படுத்த, போலி கணக்கில் இருந்து அப்படி பதிவிட்டுள்ளனர். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் செய்திகளை மட்டுமே வெளியிடுங்கள்” என மீடியாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார் சிம்பு.
 


இதில் மேலும் படிக்கவும் :