வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (19:01 IST)

விவாதம் செய்ய தயாரா? அன்புமணிக்கு சிம்பு சவால்

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே விஜய் புகைப்பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'பாபா' முதல் 'சர்கார்' வரை இந்த புகைபிடிக்கும் விவகாரம் பிரச்சனையாக உள்ளதாகவும், இதற்கு முடிவு கட்ட ஒரு விவாதம் நடத்தினால் அதில் தான் பங்கேற்று திரையுலகினர் தரப்பு நியாயத்தை கூற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அன்புமணி அவர்களுக்கு சம்மதம் என்றால் இந்த விவாதம் நடத்தப்படும் தேதி, இடத்தை அவரே அறிவிக்கலாம் என்றும் சிம்பு கூறியுள்ளார்.
 
மேலும் 'மாநாடு' படத்தில் அரசியல் உள்பட பல பிரச்சனைகள் குறித்து கூறவிருப்பதாகவும், இதனால் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுவதில் உண்மையில்லை என்றும் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் சிம்பு விளக்கியுள்ளார்.