வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (09:12 IST)

சிம்புவின் இது நம்ம ஆளு - பாடினார் யுவன்

யுவன் - சிம்பு இணைந்த படங்கள் சோடை போனதில்லை. அதிலும் மன்மதன் படப்பாடல்கள் சென்சேஷனல் ஹிட். ஆனால் கடந்த சில வருடங்களாக யுவனுக்குப் பதில் தரணையே அதிகம் பயன்படுத்தினார் சிம்பு. இதனால் இருவருக்குமிடையில் லடாய் என்றுகூட வதந்தி கிளம்பியது.
அதனை இருவருமாக சேர்ந்து உடைத்திருக்கிறார்கள்.
 
சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் யுவன். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் தெரிவித்துள்ளார் சிம்பு.
 
இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.