வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (09:12 IST)

சிம்பு, நயன்தாரா பிளாஷ்பேக்கை சொல்லும் பாடல்

கடந்த திங்கள்கிழமை இரவு சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்துக்காக ஒரு பாடலை பாடினார் யுவன். இது அனைவருக்கும் தெரிந்த சேதிதான். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக சிம்புவின் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.
யுவன் பாடிய பாடல் படத்தின் பிளாஷ்பேக்கில் வருகிறது. சரியாகச் சொல்வதென்றால் சிம்பு, நயன்தாராவின் பிளாஷ்பேக்கில் இந்தப் பாடல் வருகிறதாம். காதலால் கசிந்துருகும் வரிகளை யுவனின் குரலில் கேட்பது போல் ஆனந்தம் வேறில்லை. அப்படியொரு அனுபவமாக இந்தப் பாடல் இருக்கும் என்கிறார்கள்.
 
இது நம்ம ஆளு படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துள்ளது. இரண்டு பாடல்களை மட்டும் படமாக்க வேண்டும். அதுவும் முடிந்தால் போஸ்ட் புரொடக்ஷன்.
 
வாலு படத்தையடுத்து இது நம்ம ஆளு திரைக்கு வருகிறது.