வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (14:40 IST)

இறந்தும் வாழ வைக்கும் சில்க் ஸ்மிதா

வித்யாபாலனுக்கு பெயரும், விருதும் வாங்கித் தந்தது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர். அதன் வசூலைப் பார்த்து மிரண்டவர்கள் மலையாளம், கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக எடுத்து தங்கள் வாழ்க்கையில் செட்டிலானார்கள். இப்போது சமீர்கான் மராத்தி மொழியில் சில்க்கின் வாழ்க்கை கதையை படமாக்குகிறார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை சர்வதேச சப்ஜெக்ட். சில்க்கின் கதை என்று நடிகையை மானபங்கப்படுத்தும் காட்சிகளை வைத்துதான் படத்தை அனைவரும் ஓட்டினர். சமீர்கானுக்கு மட்டும் அந்த விருப்பம் இருக்காதா. ஈஸி மணியாயிற்றே.
 
மராத்தியில் சில்க்கின் வாழ்க்கையை படமாக்குவதற்கு அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி சம்மதம் வாங்கியுள்ளாராம். சில்க்கை பற்றி பல படங்கள் வந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு கோணத்தில் அவரது வாழ்க்கையை அணுகியது. எங்களுடைய படம் ஒட்டு மொத்தமாக அவரது வாழ்க்கையை சொல்லும் முழுமையான படம் என்கிறார் சமீர்கான்.
 
பல வருட சில்க்கின் வாழ்க்கையை நீங்களும் இரண்டரை மணி நேரம்தானே சொல்லப் போறீங்க...? அப்புறம் என்ன முழுமை...?
 
மராத்தி நடிகை ஒருவரையே சில்க்கின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளனர்.