1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (11:45 IST)

கில்லி இந்தி ரீமேக்கில் ஸ்ருதியின் குத்தாட்டம்

2003-இல் தெலுங்கில் வெளியாகி பட்டைய கிளப்பிய படம் ஒக்கடு. ஒருவன் என்று அர்த்தம். மகேஷ்பாபு நடிப்பில் குணசேகர் இயக்கிய இந்தப் படத்தை தரணி கில்லி என்ற பெயரில் தமிழில் இயக்கினார். அதன் பிறகு நடந்தது நாடறியும். விஜய்யின் சினிமா சரித்திரத்தில் இன்றும் கில்லிதான் மைல்கல்.
இந்தப் படத்தை தற்போது அர்ஜுன் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். தேவர் என்ற பெயரில் தயாராகி வரும் இதில் சோனாக்ஷி சின்கா நாயகி. வில்லனாக மனோஜ் பாஜ்பாய்.
 
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஸ்ருதியை அணுகினர். அவரும் ஆட சம்மதித்து ஆடியுள்ளார்.
 
ஒரு பாடலுக்கு ஸ்ருதி ஆடியிருப்பது இதுவே முதல்முறை.