எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; ஸ்ருதி ஹாசன்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (17:13 IST)
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

 

 
உலக நாயகன் கம்ல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராடி வருகிறார். கமல் ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அவர் மகள் ஸ்ருதி ஹாசன் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சினிமாவுக்கு வந்த புதிதில் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது கடினமாக இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. எனக்கு இப்போ அதுபற்றி கவலை இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனால் வெளியே காட்டிக்கொள்வது இல்லை. வாழ்வில் பல சங்கடங்களை கடவுள் அருளால் கடந்து வந்துள்ளேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :