சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளின் படங்கள்; கொந்தளித்த ஸ்ருதி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:48 IST)
சமூக வலைதளங்களில் பலர் தங்கள் படத்திற்கு பதிலாக நடிகர், நடிகைகளின் படங்களை முகப்பு படங்களாக வைத்துக்கொண்டு அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என நடிகை ஸ்ருதிஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நடிகர், நடிகைகளின் பின்புலங்கள் மற்றும் அவர்களது திறமைகள் தெரியாமல் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். நான் ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் நடித்து வரும் படங்கள் மற்றும் இனிமேல் நடிக்க போகும் படங்கள் குறித்த விவரங்களையும் பதிவிட்டு வருகிறேன்.
 
சிலருக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையில் அதிருப்தி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பக்கத்தில் இருப்பவர்களை குறை சொல்லி ஆனந்தப்படுவார்கள். ட்விட்டரிலும் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இவர்கள் ட்விட்டர் முகப்பில் கூட தங்கள் படங்களை வைத்துக் கொள்ளாமல் நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வைத்துக் கொள்கிறார்கள்.
 
தங்களுடைய சொந்த படங்களை வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களுக்கு பயந்து சமூக வலைதளத்தில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன், என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :