Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பின்னால் தொடர்ந்து வந்த வாலிபரின் கன்னத்தில் ஓங்கி அடித்த விஜய் நாயகி


sivalingam| Last Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (10:11 IST)
ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் நாயகியும், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகையுமான ராகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒரு வாலிபரின் கன்னத்தில் பளாரென அடித்ததாக கூறியுள்ளார்.


 
 
'ஸ்பைடர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் ப்ரித்திசிங், சமீபத்தில் தான் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது ஒரு வாலிபர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் தான் திரும்பி பார்த்தபோது அந்த பக்கம் திரும்பி கொண்டதாகவும் கூறிய ராகுல், மீண்டும் மீண்டும் இதுதொடரவே, ஆத்திரத்தில் அந்த வாலிபரின் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டதாக கூறினார்.
 
பொதுவாக தான் ஆத்திரப்படுவது இல்லை என்றும், ஆனால் இந்த விஷயத்தில் தன்னால் ஆத்திரத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறிய ராகுல் ப்ரித்திசிங், பெண்களை இளைஞர்கள் மதிக்க கற்று கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :