வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (10:03 IST)

திகில் விழாவை புறக்கணித்த ஷெரின்

படம் எடுப்பதைவிட அதனை வெளியிடுவதுதான் கடினமாகி வருகிறது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஒரு லோ பட்ஜெட் படத்தை தயாரிக்க எவ்வளவு தேவையோ அவ்வளவு விளம்பரத்துக்கு செலவளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
இந்த இக்கட்டை படத்தில் நடிப்பவர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
 
பாடல்கள் வெளியீட்டு விழாக்களை பல லட்சம் செலவளித்து நடத்துவதற்கான முக்கிய காரணமே விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகதான். ஆனால் இந்த விழாக்களை முதலில் புறக்கணிப்பது படத்தில் நடித்த நடிகைகள்தான். தெலுங்குப் படம் அனாமிகாவில் நயன்தாராதான் ஹீரோ ஹீரோயின் எல்லாம். ஆனால் படத்தின் எந்த விழாவிலும் அவர் தலைகாட்டவில்லை. அதன் காரணமாக இப்போது எந்தத் தெலுங்குப் படத்திலும் அவர் இல்லை.
 
திகில் ஒரு மீடியம் பட்ஜெட் படம். இதில் நாயகியாக நடித்தவர் துள்ளுவதோ இளமை ஷெரின். நேற்று நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஷெரின் மிஸ்ஸிங். திகில் படத்தை ஷெரினை வைத்துதான் விளம்பரமே செய்து வருகின்றனர். படவிழாவில் அவரே ஆப்சென்ட் என்றால்...?
 
விதிகளை இறுக்குங்கள் யுவர் ஹானர்.