1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 13 டிசம்பர் 2014 (13:27 IST)

கேப்டனின் வாரிசு தயார் - தொடங்கியது புகைப்பட விநியோகம்

ரத்த பந்தத்துக்கு முன் கட்சியாவது தொண்டனாவது. எடுடா ஒரு மாசம் லீவு என்று மலேசியாவுக்கு பிளைட் ஏறிய விஜயகாந்த் பற்றி எரிந்த பிரச்சனைகளில்கூட கருத்து தெரிவிக்கவில்லை. கவனம் முழுக்க இருந்தது மகன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தில்.

பெயருக்கு ஒரு இயக்குனர் இருந்தாலும் ஆக்ஷன் கட்டெல்லாம் விஜய்காந்த்தானாம். அதுவும் மலேசியாவில் அவர் வைத்ததுதான் ஷாட், அவர் சொன்னதுதான் வசனம்.
 
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த வருடம் படம் வெளியாகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் படத்தின் ஸ்டில்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சண்முகப் பாண்டியன் ஆள் எப்படி?
 
ஆரம்பகால விஜயகாந்தைப் போலவே இருக்கிறார் கேப்டனின் இளவல்.