Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகன் போட்ட கண்டிஷன் ; அடங்கிப் போன கேப்டன்


Murugan| Last Updated: செவ்வாய், 2 மே 2017 (17:06 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன், அடுத்து தான் நடிக்கும் படத்தில் விஜயகாந்தின் தலையீட்டை விரும்பவில்லை எனத் தெரிகிறது.

 

 
சகாப்தம் படம் மூலம் தனது மகனை சினிமாவில் களம் இறக்கினார் கேப்டன். அப்படத்தை முதலில் இயக்கிய இயக்குனர், சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக, புதிதாக ஒருவரை இயக்குனராக அறிமுகம் செய்தார் கேப்டன். மேலும், படத்தின் அத்தனை விஷயங்களில் அவர் தலையிட்டார். அதனால், விஜயகாந்த் போலவே நடித்தார் சண்முகப்பாண்டியன்.


 

 
விளைவு.. அப்படத்தின் இயக்குனர் காணாமல் போனார்...படமும் படுதோல்வி அடைந்தது. எனவே தற்போது தான் நடிக்க இருக்கும் மதுரை வீரன் படத்தில், தனது தந்தையின் தலையீடு இருக்கக் கூடாது என சண்முகப்பாண்டியன் விரும்புகிறாராம். இதை கேப்டனிடமே கூற, மகனின் திரையுலக பயணத்திற்கு தடைக்கல்லாக இருக்க கூடாது என நினைத்த கேப்டன், அதற்கு ஓகே சோல்லி விட்டதாக தெரிகிறது.
 
அப்படியாவது சண்முகப்பாண்டியன் வெற்றி பெறுகிறாரா எனப் பார்ப்போம்...


இதில் மேலும் படிக்கவும் :