விஜயகாந்தின் கண்களைப் பச்சை குத்திக்கொண்ட சண்முக பாண்டியன்

Eyes
CM| Last Modified செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:42 IST)
விஜயகாந்தின் கண்களைத் தன்னுடைய கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சண்முக பாண்டியன்.
விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது. சரத்குமார், சத்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
 
அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியனால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், அப்பாவின் கண்களை, கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
captain

‘அப்பா என்றாலே எல்லாருக்கும் அவருடைய கண்கள் தான் நியாபகம் வரும். நான் உயிருடன் இருக்கும்வரை, அப்பாவின் கண்களும் என்னுடன் இருக்கும்’ என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சண்முக பாண்டியன்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :