1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 19 டிசம்பர் 2014 (09:58 IST)

யுஎஸ்ஸில் நாலாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஐ ட்ரெய்லர்

ஐ படத்தைக் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றும் படம் போலவே பிரமாண்டமாக உள்ளது. 
பீட்டர் ஜாக்சனின் த ஹாபிட் பட சீரிஸின் மூன்றாவது படமான த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ் படம் 17 -ஆம் தேதி யுஎஸ்ஸில் வெளியானது. நாலாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துடன் ஐ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டு வருகிறது. ஒரு தமிழ்ப் படத்தின் ட்ரெய்லர் ஹாலிவுட் படம் ஒன்றுடன் வெளியாவது இதுவே முதல்முறை.
 
இயக்குனர் பீட்டர் ஜாக்சனின் வீட்டா நிறுவனம்தான் ஐ படத்தின் மேக்கப் டிபார்ட்மெண்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.