ஓவியாவை அடிக்காமல் விட மாட்டேன்: தொடரும் ஷக்தியின் ஆணவ பேச்சு!

ஓவியாவை அடிக்காமல் விட மாட்டேன்: தொடரும் ஷக்தியின் ஆணவ பேச்சு!


Caston| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (13:01 IST)
கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் ஓவியா ஷக்தி உரையாடலின் போது ஆவேசப்பட்ட ஷக்தி ஓவியாவை ஓங்கி அறைய பாய்ந்தார். அப்போது ஓவியா தைரியமான புதுமைப்பெண்ணாக எங்க அறையுங்க பார்ப்போம் என கெத்தாக போய் நின்றார்.

 
 
இதனையடுத்து அந்த வார இறுதியில் கமல் ஷக்தியை கண்டித்தார். ஆனால் மீண்டும் ஷக்தி தனது ஆணவமான பேச்சை தொடர்கிறார். ஓவியாவை அடித்துவிட்டு பிக் பாஸ் வீட்டை வெளியேற தயார் என தனது மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
நேற்று ஓவியா குறித்து பேசிய ஷக்தி, என்னால் எத்தனை நாள் பொறுமையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை, எதையாவது தூக்கி அடிக்க வேண்டும் போல இருக்கு என்றார். மேலும் ஓவியாவை அடித்துவிட்டு அடுத்த வாரம் வெளியேறுவதற்கும் தான் தயராக இருக்கிறேன் என ஆணாதிக்க ஆணவத்துடன் ஷக்தி பேசுகிறார்.
 
ஷக்தியின் இந்த வன்முறையான பேச்சை இந்த வாரம் பஞ்சாயத்து பண்ண வரும் கமல்ஹாசான் நிச்சயம் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :