வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (13:09 IST)

முத்தக்காட்சியில் நடிக்க; இப்படி ஒரு கன்டிஷன் போட்ட சீரியல் நடிகை!!

சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷனின் பேஹத் சீரியல் பிரபலமானது. இதில் குஷால் டாண்டன் மற்றும் ஜெனிபர் விங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


 
 
இந்த தொடரில் இருவருக்கும் இடையே முத்தக் காட்சியை வைத்துள்ளனர். இதில் நடிக்க ஜெனிபர் மறுப்பார் என்று இயக்குனர் நினைத்தார். ஆனால் அவரோ ஒரு கன்டிஷ்னுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
 
அது என்னவெனில், ஒரே டேக்கில் முத்தக் காட்சியை எடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி உள்ளார். இயக்குனரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
காட்சியில் நடிப்பதற்கு முன்பு குஷால் டாண்டன் மற்றும் ஜெனிபர் விங்கட் பேசியுள்ளார். பின்னர் ஒரே டேக்கில் முத்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளனர். 
 
அந்த காட்சியை எடுக்கும்போது செட்டில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவை அனைத்து டிஆர்பியை அதிகரிக்க தான் என்றும் கூறப்படுகிறது.