வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (14:41 IST)

செப். 30 அச்சம் என்பது மடமையடா ரிலீஸ்...?

செப். 30 அச்சம் என்பது மடமையடா ரிலீஸ்...?

செப்டம்பர் 30 ஆம் தேதி அச்சம் என்பது மடமையடா படத்தை வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது.

 
நீண்டநாள் தயாரிப்பில் இருந்த அச்சம் என்பது மடமையடா சிம்பு ஒரேயொரு பாடலுக்கு கால்ஷீட் தராததால் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. இந்நிலையில், சிம்பு மனமிரங்க, பாங்காக்கில் அந்தப் பாடலை படமாக்கினார். படத்தின் பிற வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், பாடலை மட்டும் எடிட் செய்து இணைத்து, படத்தை செப்டம்பர் 30 வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளனர். 
 
செப்டம்பர் 30 வேறு படங்கள் அதிகம் இல்லாததால் படக்குழு அந்த தேதியை குறி வைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.