வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (11:38 IST)

ஜேம்ஸ் பாண்டுக்கு வந்த அதே சிக்கல்தான் ஆர்யா, அனுஷ்காவுக்கும்

சென்சார் போர்டுக்கும் முத்தத்துக்கும் அப்படியென்ன பகையோ. ஜேம்ஸ் பாண்டின் புதிய படமான ஸ்பெக்டரில் இடம் பெற்ற முத்தக் காட்சி நீளமாக இருக்கிறது என்று தணிக்கை செய்தனர். அதே பிரச்சனையை ஆர்யா, அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படமும் எதிர்கொண்டிருக்கிறது.


 
 
அனுஷ்கா குண்டு பெண்ணாகவும், ஒல்லியாகவும் நடித்திருக்கும் படம், இஞ்சி இடுப்பழகி. இதில் அனுஷ்காவும் ஆர்யாவும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. இந்த முத்தம் மிக நீளமாக இருக்கிறது, அதை நீக்கினால் தான் யு சான்றிதழ் தர முடியும் என அடம்பிடித்துள்ளது தணிக்கைக்குழு. யு சான்றிதழ் இல்லையென்றால் 30 சதவீத வரிச்சலுகையை இழக்க வேண்டிவரும். வரிச்சலுகையா? முத்தமா?
 
நீண்ட யோசனைக்குப் பிறகு முத்தத்தை தணிக்கையின் கத்திரிக்கு தின்னத் தந்து யு சான்றிதழை பெற்றிருக்கிறது இஞ்சி இடுப்பழகி.
 
தணிக்கைக்குழு உறுப்பினர்களை நம்மூர் கோவில்களுக்கு டூர் அழைத்துச் சென்று சிற்பங்களை காட்ட வேண்டும். அப்படியாவது திருந்தட்டுமே.