Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'பாரதி கண்ட புதுமைப்பெண் ஓவியா: இயக்குனர் சீனுராமசாமி


sivalingam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (22:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய பின்னர் ஜெயலலிதா இல்லாத அதிமுக போன்றும், சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் போன்றும் உள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சி போரடிக்க ஆரம்பித்துவிட்டது.


 
 
இந்த நிலையில் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும் அவரை பற்றியேதான் இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் இன்னும் ஓவியாவை வாழ்த்துவதை நிறுத்தவில்லை
 
இந்த நிலையில் ஓவியா குறித்து பிரபல இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது, 'ஒவியா வெளியேறியது சிறையை விட்டு, இதற்குத்தான் பாரதி ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே என்றார். இதற்கு பெயர் விடுதலை. இதை புரிந்தவர் ஆதரிப்பர்' என்று கூறியுள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு நிகராக ஓவியாவை இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்தியதற்கு பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :