Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னவானது சங்கமித்ரா...?


Sugapriya Prakash| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (13:21 IST)
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம், சுந்தர் சி. இயக்கும் முதல் சரித்திரப் படம், பட்ஜெட் 300 கோடிகள் என்று முழக்கமிட்ட சங்கமித்ரா படம் குறித்து இப்போது பெரும் நிசப்தம். என்னவானது சங்கமித்ரா?

 
 
இந்தப் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒத்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை பொறுத்தவரை இதுவரை ஒப்பந்தமானவர்களில் ரஹ்மான் மட்டும்தான் பிக் ஷாட். மற்றவர்கள்?
 
விஜய், சூர்யா என்று முயன்று கடைசியில் ஜெம் ரவி, ஆர்யா தான் கிடைத்திருக்கிறார்கள். ஹீரோயினையாவது இந்தியின் முன்னணி நடிகையாக பிடிக்கலாம் என்று முயன்று கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிக்குவதாக இல்லை.
 
முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல் 300 கோடிக்கு படம் எடுத்தால் என்னாவது? பாகுபலியில் பிரபாஸை நடிக்க வைத்து 500 கோடிகளை அள்ள சுந்தர் சி. ஒன்றும் ராஜமௌலி இல்லையே.
 
சங்கமித்ரா முன்னோக்கி நகர்வது ஹீரோயின் கிடைப்பதில் தான் இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :