Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கதிராமங்கலத்தை காப்பாற்ற களமிறங்கிய விஜய் ரசிகர்கள்


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (14:02 IST)
கதிராமங்கலத்தை காப்பற்றுங்கள் என்று நடிகர் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் செய்து பரப்பி வருகின்றனர்.

 

 
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் கச்சா எண்ணெய் எடுத்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், விஜய் ரசிகர் 'SAVE TN KATHIRAMANGALAM' என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளமான டுவிட்டரில் பரப்ப தொடங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட இந்த ஹேஸ்டேக்கை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகராஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இந்த ஹேஸ்டேக் தற்போது வைரலாகி வருகிறது. 
 
விஜய் நடித்த கத்தி படத்தின் காட்சிகளை வைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :