1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2016 (13:32 IST)

நதியை காப்பாற்ற குரல் கொடுத்த மடோனா செபஸ்டியான்

நதியை காப்பாற்ற குரல் கொடுத்த மடோனா செபஸ்டியான்

கேரளாவில் உள்ள நதிகளில் மணல் அள்ள தடை உள்ளது. தமிழக நதிகள் தண்ணியில்லாமல் வறண்டு கிடக்கும், அல்லது மணல் அள்ளப்பட்டு குளம் போல் தேங்கிக் கிடக்கும்.


 


ஆனால், கேரளா ஆறுகளில் மணலும் தாராளம் தண்ணியும் தாராளம்.
 
கேரளாவில் மிகுந்த சவாலாக இருப்பது ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள். இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மாசடைந்து வருகின்றன. குறிப்பாக கேரளாவின் பெருமிதங்களில் ஒன்றான பெரியாறு மாசுகளால் நாசமடைந்து வருகிறது.
 
பெரியாறை காப்பாற்ற, சேவ் பெரியாறு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த அமைப்பின் பிரதான நோக்கம். அப்படி கொச்சியில் நடந்த கூட்டத்தில், விழிப்புணர்வு பாடல் பாடியவர், நடிகை மடோனா செபஸ்டியான். பிரேமம், காதலும் கடந்து போகும் படங்களில் நடித்தவர். 
 
மடோனாவின் நிகழ்ச்சிக்கு வந்ததும், விழிப்புணர்வு பாடல் பாடியதும், சேவ் பெரியாறு அமைப்பின் நோக்கத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது.
 
மடோனா அடிப்படையில் ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.