சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகனும்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகனும்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!


Caston| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:50 IST)
பாகுபலி-2 படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டால் தான் அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.

 
 
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் பாகுபலி-2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக கூறிய கருத்துக்கு தற்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
 
இதனையடுத்து படத்தின் இயக்குநர் கன்னட அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வெளியிட அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகிற 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு நடத்துவோம் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளதால் பாகுபலி படத்தின் கர்நாடக உரிமை இதுவரை விற்கப்படாமலே உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :