சிபிராஜின் 'சத்யா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (00:05 IST)
சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வெளியான பின்னர் அவரும் ஒரு வெற்றிகரமான நடிகராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டுள்ளார். அவரது முந்தைய படமான 'ஜாக்சன் துரை' ஓரளவுக்கு நல்ல வசூல் செய்ததை அடுத்து அவருடைய அடுத்த படமான 'சத்யா' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
இந்த நிலையில் இன்று சத்யா திரைப்படம் சென்சாருக்கு சென்று 'யூஏ' சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 129 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது.
 
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சத்யராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சைமன் கே.கிங் என்பவர் இசையமைத்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :