வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (14:28 IST)

சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் சூர்யா...?

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் நடிகர் சூர்யாவிடம் கதை கூறியிருப்பதாகவும், அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
 
சமீபத்திய தகவல், இவர்கள் இணையும் படம் சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகமாக இருக்கலாம்.
 
மனிதனின் பேராசைதான் இன்று நாட்டில் நடக்கும் மோசடிகளுக்கு காரணம் என்பதை துலக்கமாகச் சொன்ன படம், சதுரங்க வேட்டை.
 
சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும், சுவாரஸியமாகவும் சொன்னதில் சதுரங்க வேட்டை வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கிறார் எனும் போது இயல்பாகவே எதிர்பார்ப்பு எழும்.
 
ஆனால், இந்தத் தகவல்கள் இன்னும் சூர்யாவால் உறுதி செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.