1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 12 நவம்பர் 2016 (14:23 IST)

சதுரங்க வேட்டை 2... அரவிந்த்சாமி, த்ரிஷாவின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்

சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். படத்தை இயக்குகிறவர் நிர்மல் குமார்.

 
நடிகர் இயக்குனர் மனோபாலா தயாரிப்பில் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை சர்ப்ரைஸ் ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக சதுரங்க வேட்டை 2 படத்தை எடுக்கின்றனர்.
 
இந்தப் படத்தை வினோத் இயக்கவில்லை, ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நிர்மல் குமார் படத்தை இயக்குகிறார்.
 
ரோஜா நாயகனும், சாமி நாயகியும் இணைந்துள்ள இந்த பர்ஸ்ட் லுக்கே மிரட்டுகிறது.