'இதெல்லாம் ஒரு கதையா? விஜய்சேதுபதியை அவமதித்த சசிகுமார், ஜீவா?


sivalingam| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (00:14 IST)
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விக்ரமுக்கு பின்னர் ரிஸ்க்கான கமர்ஷியல் அல்லாத படங்களில் நடிப்பவர் விஜய்சேதுபதி மட்டுமே. அவரது பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் இதற்கு சான்றுகள்


 
 
இந்த நிலையில் 'சேதுபதி' இயக்குனர் அருண், விஜய்சேதுபதியிடம் ஒரு கதையை கூறியுள்ளார். கமர்ஷியல் இல்லாமல் முழுக்க முழுக்க மெசேஜ் சொல்லும் இந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்திருந்தாலும் தற்போது அவர் பிசியாக இருப்பதால், இயக்குனர் அருணை தோளில் தட்டி கொடுத்து இந்த கதையை சசிகுமார் அல்லது ஜீவாவிடம் கூறுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார்.
 
ஆனால் சசிகுமாரும், ஜீவாவும் இந்த கதையை கேட்டு இதெல்லாம் ஒரு கதையா, இதை படமாக எடுத்து ஒருத்தனும் தியேட்டருக்கு வரமாட்டாங்க என்று இயக்குனரை அவமதித்ததும் இல்லாமல் அவர்களிடம் அனுப்பி வைத்த விஜய்சேதுபதியையும் சேர்த்து அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :