Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரம்யா நம்பீசன் பாடிய குத்துப்பாட்டு

Cauveri Manickam (Sasi)| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (09:53 IST)
‘கூத்தன்’ படத்துக்காக, குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன்.நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்றாலும், ரம்யா நம்பீசனுக்கு பாடுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் பாடிய ‘கலாச்சி ஃபை’ பாட்டு, இப்போதும் ஏக பிரபலம். இந்நிலையில், ‘கூத்தன்’ படத்துக்காக  குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன்.
 
புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம், டான்ஸ் ரியாலிட்டி ஷோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் ‘காதல் காட்டுமிராண்டி’ என்ற பாடலைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். ‘கில்லி’யில் இடம்பெறும் ‘அப்படிப்போடு…’  பாடலைப் போல செம ஸ்பீடாக இருக்கும் இந்தப் பாடலை, விவேக் எழுதியுள்ளார்.
 
இந்தப் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ ஹரிஹரசுதனுன் ரம்யா நம்பீசனுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். நடன இயக்குநர் மற்றும்  நடிகரான நாகேந்திர பிரசாத், இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், டான்ஸ் ஷோவின் நடுவர்களாக ராம்கி  மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :