Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'ரஜினி 161' படத்தின் வில்லன் சமுத்திரக்கனியா?


sivalingam| Last Modified வியாழன், 18 மே 2017 (06:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படம் வரும் 28ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் இயக்குனர் ரஞ்சித் தீவிரமாக உள்ளார்.


 


தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சமுத்திரக்கனி இந்த படத்தில் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல்  தினத்தில் இந்த படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தயாரிப்பு தரப்பினர் கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :