நடிகர் வடிவேலுவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த சமுத்திரகனி!

samuthirakani
Last Modified புதன், 12 ஜூன் 2019 (13:24 IST)
நடிகர் வடிவேலு சில வருடங்களாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவருக்குப் போதிய பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் வடிவேலு, ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் குறித்து சர்சைக்குரிய விதத்தில் விமர்சனம் செய்தார்.
அதில், சிம்புதேவனுக்கு ஒண்ணும் தெரியாது என்றும், இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸை வைத்து பிழைத்து வருகிறார் என்றும் தெரிவித்தார். இதற்குத் திரைத்துறையினர் கடுமையான விமர்சங்களையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி தனது டுவிட்டர் பக்கத்தில் வடிவேலுவின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
 
'அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இஎருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் படைப்பாற்றல்  புலிம்கேசி தவிர்த்து மற்ற படைப்புகளில் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள் 'என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :