வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 27 மே 2015 (14:02 IST)

சமுத்திரகனி - கண் தெரியாத கதாநாயகன்

நடிக்க ஆரம்பித்த பிறகு சமுத்திரகனிக்கு நிற்க நேரமில்லை. ஒன்றரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அதில் வெற்றிமாறனின் விசாரணையும் அடக்கம்.
 
ராவா என்ற படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இதன் விசேஷம், சமுத்திரகனிக்கு இதில் கண் தெரியாதவர் வேடம். இந்தப் படம் சமுத்திரகனியின் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணரும் என்கிறார்கள்.
 
தமிழ் தவிர மலையாளம், கன்னட படங்களில் நடிக்கவும் சமுத்திரகனிக்கு வாய்ப்புகள் வருகின்றன. விரைவில் இவர் இயக்கி நடித்துள்ள கிட்ணா வெளிவர உள்ளது.