ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்– சம்பத்

cauveri manickam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:49 IST)
‘ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்’ என நடிகர் சம்பத் தெரிவித்துள்ளார். 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் சம்பத். இவரும், ரஜினியும் இருக்கும் போட்டோ தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களைக் கலக்கி வருகிறது.

“என்னுடைய கேரக்டர் என்ன என்பதைப் பற்றி இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஆனால், சுவாரசியமான கேரக்டராக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கிறது. அவருடன் குறிப்பிட்ட காட்சிகளில் சேர்ந்து நடித்திருக்கிறேன்.

பா.இரஞ்சித்தை, ‘சென்னை 28’, ‘கோவா’ மற்றும் ‘சரோஜா’ படங்களில் இருந்தே தெரியும். அவரைப் பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது, மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர். தனக்கு என்ன தேவையோ, அதை வாங்காமல் ‘கட்’ சொல்ல மாட்டார்” என்று சிரிக்கிறார் சம்பத்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :