Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமந்தாவுக்கு இப்படியொரு கஷ்டமா?


cauveri manickam| Last Modified சனி, 8 ஜூலை 2017 (18:21 IST)
படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், தன் வருங்காலக் கணவர் நாக சைதன்யாவுடன் பேசக்கூட நேரமில்லாமல் தவிக்கிறாராம் சமந்தா.
 
 

அக்டோபர் மாதம் சமந்தா – நாக சைதன்யா திருமணம் நடப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கைநிறைய படங்களை வைத்திருக்கும் சமந்தா, மற்றவர்களை காக்க வைக்கக்கூடாது என்பதால், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அவசர அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார். காரணம், திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்பதுதான்.

விஜய்யுடன் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட சமந்தா, தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். இதுதவிர, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, ராம்சரண் ஜோடி என இருக்கிற படங்களில் ஓய்வில்லாமல் வரிசையாக நடிக்கிறார். இதனால், நாக சைதன்யாவிடம் காதல் வார்த்தைகள் பேசக்கூட நேரமில்லையாம்.


இதில் மேலும் படிக்கவும் :