இன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா? சமந்தா அப்செட்

Last Updated: புதன், 20 பிப்ரவரி 2019 (19:08 IST)
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
 
தெலுங்கிலும் இண்டஹ் படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். விஜய் சேதுபதி ரோலில் சர்வானந்தும், திரிஷா ரோலில் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமாகினர். படத்தை குறித்த அப்டேட் இவ்வளவுதான். ஆனால், இதற்குள் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். 
 
தமிழில் 96 படம் எந்த பாணியில் உருவாக்கப்பட்டதோ அதேபோல் தெலுங்கில் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதால் கோவிந்த் வசந்தாவே இசை அமைக்க வேண்டும் என்று இயக்குனர் பிரேம் குமார் கூறியிருகிறார். 
ஆனால், இதனை ஏற்காத தயாரிப்பாளர், தெலுங்கில் உள்ள பிரபல இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு இவர்களில் யாரையாவது ஒருவரை இசை அமைப்பாளராக தேர்வு செய்யுங்கள் என கூறியுள்ளார். 
 
இதனால், இருவருக்கும் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, படத்தின் நாயகன் சர்வானந்த் வேறு படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவிட்டாராம். 
 
படமே இன்னும் ஆரம்பிக்கல அதுக்குள்ள பிரச்சனையா என அப்செட்டில் உள்ளாராம் சமந்தா. 


இதில் மேலும் படிக்கவும் :