திருமணத்திற்கு பாட்டி சேலையை கட்ட போகும் சமந்தா!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:37 IST)
சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. திருமண ஏற்பாடுகளை சைதன்யா குடும்பத்தினர் தீவிரமாக கவனித்து வருகின்றனர். 

 
 
6 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருமண விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. சமந்தாவுக்கு திருமண ஆடைகள் வடிவமைக்கும் பொறுப்பை பிரபல டிசைனர் கிரஷா பஜாஜ் ஏற்றிருக்கிறார்.
 
என்ன தான் புது உடைகள் டிசைன் செய்தாலும், நாக சைதன்யாவின் பாட்டி உடுத்தியிருந்த பட்டு சேலையை சமந்தா திருமணத்தன்று உடுத்த உள்ளார். இந்த சேலையின் கூடுதலாக சில தங்க அணிகலன் இணைத்து டிசைன் செய்யப்படுகிறது. 
 
சைதன்யாவின் பாட்டி சேலையை திருமணத்தின் போது உடுத்துவது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :