சமந்தாவா, கீர்த்தி சுரேஷா...? சாவித்ரி யார் என்பதற்கு விடை கிடைத்தது

Sasikala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (11:41 IST)
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை தமிழ், தெலுங்கில் படமாக எடுக்கின்றனர். நாக் அஸ்வின்  படத்தை இயக்குகிறார்.

 
இந்தப் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சமந்தா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால், சாவித்ரியாக நடிக்கப்  போவது யார் என்ற கேள்வி எழுந்தது. படத்தின் தயாரிப்பாளர், அஸ்வின் தத் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும், கதையை முன்னகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பதாகவும் அவர்  கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :