Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாக சைதன்யாவுடன் கல்யாணம் முடிந்துவிட்டது– ஷாக் கொடுத்த சமந்தா

செவ்வாய், 11 ஜூலை 2017 (12:58 IST)

Widgets Magazine

நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே, கையில் உள்ள படங்களை அவசரம் அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார். ஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதை மட்டும் விடாமல் கடைப்பிடித்து வருகிறார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சமந்தா அளித்த பதில்கள் இவை:


 

 
செலிபிரட்டி அந்தஸ்து என்பது வரமா, சாபமா?

செலிபிரட்டி என்பது மிகப்பெரிய வரம். வேறெந்த வேலையிலும் கிடைக்காத வெகுமதி அது.
 
நாக சைதன்யாவின் செல்போனை நீங்கள் சோதனையிடுவீர்களா?

ஹா… ஹா… நிச்சயமாக இல்லை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி… அடுத்தவரின் செல்போனை நோண்டுவது கேவலமான செயல்.
 
நீங்களும், நாக சைதன்யாவும் பெரும்பாலும் எதைப்பற்றி பேசிக் கொள்வீர்கள்?

என்ன டின்னர் சாப்பிடலாம் என்பதைப் பற்றித்தான்.
 

 

உங்கள் ரசிகர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க…

ஒற்றை வார்த்தையில் முடித்துவிடக் கூடிய சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள்.
 
மகேஷ் பாபு பற்றி எங்களுக்குத் தெரியாத விஷயம் ஏதாவது ஒன்றைக் கூறுங்கள்…

அவருடன் இருந்தால் மிகச்சிறப்பாக பொழுது போகும். உங்களுக்குத் தைரியம் இருந்தால், அவர் இருக்கும் இடத்தில் நீங்கள் சிரிக்காமல் இருந்து பாருங்கள்.
 
உங்களுடைய கனவு ரோல் என்ன?

சமந்தாவாகவே இருப்பது.
 
ராம் சரணுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

அந்தப் படத்துக்கு நிறைய தடைகள் வந்தபோதும், அவை எல்லாவற்றையும் தகர்த்துவிட்டார். உங்களைப் போலவே அவரைத் திரையில் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.
 
தெலுங்குப் படவுலகில், சமீபத்தில் உங்களை ஈர்த்த ஹீரோயின் யார்?

எல்லோரையும் பிடிக்கும். ரகுல் ப்ரீத்சிங், ரெஜினி, ராஷி, லாவண்யா எல்லோருமே நண்பர்கள் தான்.
 
காஜல் அகர்வாலைப் பற்றி ஒரு வார்த்தை…


அழகானவர்.
 
சிவகார்த்திகேயன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் சந்தோஷமானவர்.
 
நீங்களும், நாக சைதன்யாவும் திருமணத்துக்குத் தயாராகிவிட்டீர்களா?

என்னைப் பொறுத்தவரை, மனதளவில் ஏற்கெனவே அவரைத் திருமணம் செய்துவிட்டேன். எங்களைவிட, மற்றவர்களுக்குத்தான் எங்கள் திருமணம் எக்ஸைட்டாக இருக்கும்.
 
திருமணத்துக்குப் பிறகும் உங்களுடைய பிரதியுஷா ஃபவுண்டேஷன் சேவைகளைத் தொடர்வீர்களா?

நிச்சயம். திருமணம் ஆகவில்லை அல்லது ஆகிவிட்டது என்ற பாகுபாடு இதில் இருக்காது.
 
‘மெர்சல்’ படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன?

ஜாலியான கேர்ள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதாவின் ஆடையை பற்றி விவாதித்த ஆண் போட்டியாளர்கள்!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் தொடந்து 3 வது வாரமாக இருந்து ...

news

நடிகைகளை அழைத்துக்கொண்டு தீவுக்குப் பறக்கும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கவுள்ள ‘பார்ட்டி’ படம் தீவில் படமாக உள்ளதால், படக்குழுவினருடன் அங்கு ...

news

வெயிலில் விக்ரமை வாட்டியெடுத்த கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ ஷூட்டிங், கடுமையான வெயிலில் பாலைவனத்தில் ...

news

பிக்பாஸ் ; வீட்டிற்கு போகாத கஞ்சா கருப்பு - ஏமாற்றுகிறதா விஜய் டிவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது போல் காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை ...

Widgets Magazine Widgets Magazine