Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தன் உதவியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட சமந்தா!

Sasikala| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:52 IST)
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதன்படி அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.

 
திருமணத்துக்குப் பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன். எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டுமே. நாக சைதன்யாவுக்கும் நான் தொடர்ந்து நடிப்பதில்தான் விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது தான் அணிந்திருந்த விலை உயர்ந்த மோதிரம் ஒன்றை சமந்தா தொலைத்துவிட்டாராம். மோதிரத்தை தன் காரில் தான் வைத்திருந்தாராம். ஆனால் அது காணாமல் போய் விட்டது என்று கூறும் இவர், தன் வீட்டில் வேலை செய்யும் யாரோ ஒருவர் தான் எடுத்திருக்கிறார் வாய்ப்புகள் உண்டு என்று சந்தேகப்படுகிறார்.
 
இந்நிலையில் எல்லோரையும் கூப்பிட்டு விசாரிப்பது, அவர்கள் மனதை புண்படுத்தும் என்று உணர்ந்த இவர், தன் உதவியாளர்கள் அனைவரையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிகிறது. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :