வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 28 ஜூன் 2017 (13:21 IST)

ஆடை சர்ச்சையில் சிக்கிய சமந்தா!!

நடிகை சமந்தா விரைவில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் சமந்தா.


 
 
இந்நிலையில், சில மாதங்களுக்கு தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இது ஒரு கௌரவமாக இருந்தாலும், இந்த விஷயம் தற்போது சமந்தாவை சிக்கலில் சிக்கவைத்துள்ளது.
 
கைத்தறி துணி விளம்பரத்திற்காக கைத்தறி ஆடைகளிலேயே கிளாமராக சமந்தா தோற்றமளிக்கும் போட்டோ வெளிவந்தது. இது அவரது வருங்கால குடும்பத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது ஒரு புறம் இருக்க, தெலுங்கானா மாநிலத்தின் எதிர்கட்சிகள் சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் பிறந்த ஒரு பெண்ணை மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னையை சேர்ந்த சமந்தாவை நியமித்தது தவறு சமந்தாவிற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.
 
இவற்றை எவ்வாறு சமாளிக்க போகிறார் சம்ந்தா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்....