வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மே 2017 (11:57 IST)

பிகினி உடை: விமர்சித்த ரசிகர்களை விளாசிய சமந்தா!!

நடிகை சமந்தா தனது புகைபடத்தை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை டிவிட்டரில் கொடுத்துள்ளார்.


 
 
நடிகை சமந்தா தனது காதலரான நடிகர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது, விஜய்யுடன் ஒரு படம், விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என தமிழில் சில படங்களை கமிட் ஆகியுள்ளார். 
 
மேலும், நாகர்ஜுனா ஜோடியாக ஒரு தெலுங்கு படம், ராம் சரண் ஜோடியாக ஒரு தெலுங்குப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சமந்தா.
 
இந்நிலையில், சமந்தா பிஸியாக இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதுபோல சில நாட்களுக்கு முன்பு தான் விடுமுறைக்கு செல்வதாக  புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 
 
அந்த புகைபடத்தில் அவரது பிகினி உடை இருந்ததால் பலர் அவரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.
 
இதனால் கோபமான சமந்தா, ஒரு பெண் என்ன உடை அணிகிறாள் என்பதை பொறுத்துதான் நீங்கள் ஒருத்தரை மதிப்பிடுவீர்களா? உங்களது புத்தியை நினைத்து வெட்கப்படுங்கள் என பதிலளித்துள்ளார்.