Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமீர் கானை வெறுக்கிறேன்... சல்மான் கானின் அன்புப் பாராட்டு

bala| Last Modified திங்கள், 26 டிசம்பர் 2016 (17:08 IST)
வெறுப்பில ஏது அன்பு என்று தோன்றலாம். ஆனாலும் அப்படி ஒன்று இருக்கத்தான் செய்கிறது.சல்
 
மான் கானின் சுல்தான் படத்தைப் போல அமீர் கானின் தங்கல் படமும் மல்யுத்தத்தை மையப்படுத்தியது. அதனால், தனது தங்கல் படத்தை சல்மான் கானுக்கு திரையிட்டு காட்ட ஆர்வமாக இருப்பதாக அமீர் கான் கூறியிருந்தார். இந்நிலையில் படம் குறித்து சல்மான் ட்வீட் செய்துள்ளார். எப்படி?

"எனது குடும்பத்தினர் தங்கலை பார்த்துவிட்டு, சுல்தானைவிட சிறப்பாக இருப்பதாக கூறினர். தனிப்பட்ட முறையில் உங்களை விரும்பினாலும், அமீர் கான், தொழில்முறையில் உங்களை வெறுக்கிறேன்" என அதில் கூறியிருந்தார்.

இந்த வெறுப்பு அமீர் கான் அவ்வளவு திறமையானவர் என்பதை சொல்லாமல் சொல்லியதால் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் சல்மானின் வெறுப்பு ட்வீட்டால் அகமகிழ்ந்துள்ளனர். "சல்லு, உங்களது வெறுப்பில் நான் அன்பை மட்டுமே உணர்கிறேன்" என்று அமீர் கான் பதில் ட்வீட் செய்ய, பாலிவுட் முழுக்க உணர்ச்சிகரமான மனநிலையில் உள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :