சக்கப்போடு போடும் சிம்பு

Sasikala| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (14:40 IST)
சிம்பு என்றால் வேண்டாத வம்பு, தேவையில்லாத தாமதம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும். இந்த வருடம் சின்ன  அதிர்ச்சி. எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

 
சந்தானம் நடிக்கும் சக்கப்போடுபோடுராஜா படத்தின் இசையமைப்பாளராக சிம்பு பொறுப்பேற்றிருக்கிறார் அல்லவா... முதல்  ட்யூன் கிடைக்க 2017 டிசம்பர்வரை சந்தானம் காத்திருக்க வேண்டிவரும் என்று பலரும் கலாய்த்துக் கொண்டிருக்க, படத்தின்  மொத்த பாடல் கம்போஸிங்கும் முடிந்தது, ஒலிப்பதிவுக்கான வேலைகள் முழுவீச்சில் போய்க்கொண்டிருக்கிறது என்று சிம்பு  ட்வீட் செய்துள்ளார்.
 
2017 உண்மையிலேயே அதிசய ஆண்டுதானோ?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :