வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (00:43 IST)

சூர்யாவுக்கு பாடம் எடுப்பாரா மலர் டீச்சர்?

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் கலக்கிய சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இது இவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் இயக்கத்தில் 'கரு' என்ற தமிழ்ப்படத்தில் அவர் நடித்துள்ளார்

சூர்யா, சாய்பல்லவி, நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றார். இவர் சமீபத்தில் தயாரித்த தீரன் அதிகாரம் ஒன்று, அருவி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் வரும் ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.