வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (14:00 IST)

துல்கர் சல்மானைக் காதலிக்கும் சாய் தன்ஷிகா

துல்கர் சல்மானைக் காதலிப்பவராக ஒரு படத்தில் நடித்துள்ளார் சாய் தன்ஷிகா.


 


பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சோலோ’. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். பல கதைகளைக் கொண்ட இந்தப் படத்தில், துல்கர் சல்மானைக் காதலிக்கும் பெண்ணாக சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகாவுக்கு, அவர்களைப் போல பேசுவது, நடப்பது எல்லாம் கடினமாக இருந்ததாம். அதுவும் குறிப்பாக, அவர்களுடைய உடல்மொழியைக் கொண்டு வருவதற்குள் படாதபாடு பட்டுவிட்டாராம். சாய் தன்ஷிகாவுக்கு மலையாளம் புதிது என்பதால், படப்பிடிப்பு சமயத்தில் ரொம்பவே உதவியாக இருந்தாராம் துல்கர் சல்மான்.